17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தடுப்பு நடவடிக்கை.இளைஞா்களுடன் கரம் கோா்த்து கிராமத்தை சுத்தப்படுத்திய ஊராட்சி மன்றத்தலைவா்

கொரோனா தடுப்பு நடவடிக்கை.இளைஞா்களுடன் கரம் கோா்த்து கிராமத்தை சுத்தப்படுத்திய ஊராட்சி மன்றத்தலைவா்

எழுதியவர்: mohan April 1, 2020, 11:32 am

உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும், மஞ்சள் நீர் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்த இளைஞர்கள்.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் சுகாதாரதுறை அதிகாரிகள் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து கிராமத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் அங்குள்ள அனைத்து தெருக்களிலும் மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்பட்டனர். மேலும் அங்குள்ள கோவில்கள், அங்கன்வாடிமையங்கள், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி மருந்துகளும் தெளித்தனர். தனால் கிராமம் முழுவதும் சுத்தமடைந்துள்ளதாக அந்தபகுதி மக்கள் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!