18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் விவசாயிகளின் கோரிக்கையை அரசு எற்பு

நிலக்கோட்டையில் விவசாயிகளின் கோரிக்கையை அரசு எற்பு

எழுதியவர்: mohan April 1, 2020, 11:05 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மக்களின் வாழ்வாதார என்றாலே பூக்கள்தான்.இதனால் தற்போது நிலக்கோட்டை பகுதியில் மல்லிகைப்பூ மற்றும் சம்மங்கி, பிச்சிப்பூ உள்ளிட்ட நறுமணப் பூக்களை அதிக அளவில் சாகுபடி செய்து தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக அதிக அளவில் உற்பத்தியாகிறது.கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளிடம் பூக்களை சேகரித்து வாகனங்களின் மூலம் நறுமண தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த மாவட்ட துணை ஆட்சியர் சிவசுப்பிரமணியிடம் நிலக்கோட்டை அ தி மு க ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் விவசாயிகள் , வியாபாரிகள் மனு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து முறையாக அனுமதி வழங்கி 5 கிராமங்களுக்கு ஒரு வாகனத்தில் சென்று நேரில் விவசாயிகளிடம் பூக்களை சேகரித்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது.அப்போது உடன் நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், வருவாய் ஆய்வாளர் சென்ன கிருஷ்ணன், நிலக்கோட்டை கிராம அலுவலர் ராமமூர்த்தி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சங்கிலி, முருகேசன், அருள்சாமி, ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!