17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கொரோனா வைரஸ்-மேலப்பாளையம் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு..

நெல்லையில் கொரோனா வைரஸ்-மேலப்பாளையம் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு..

எழுதியவர்: Askar March 31, 2020, 10:16 pm

நெல்லையில் கொரோனா வைரஸ்-மேலப்பாளையம் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு..

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை மேலப்பாளையம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவமால் இருக்க, அதன் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தனிமைப்படுத்தி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் குறிப்பாக, மேலப்பாளையம் பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேலப்பாளையம் பகுதியை முற்றிலும் தனிமைப்படுத்தி நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மேலப்பாளையம் பகுதி எல்லை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. அங்கிருப்பவர்கள் வெளியே செல்லவோ, வெளியாட்கள் அங்கு செல்லவும் அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

அத்துடன், சுகாதாரப் பணியாளர்களை நோய் தடுப்பு பணிகளும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த சூழல் மேலும் சவாலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!