18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அருகே லட்சுமிபுரத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தால் பரபரப்பு…..

கீழக்கரை அருகே லட்சுமிபுரத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தால் பரபரப்பு…..

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2020, 12:14 am

கீழக்கரை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் வீட்டு சமையல் தேவைக்காக விறகுகளை சேகரிப்பதற்காக லட்சுமிபுரம் மேடு மாடன்கோவில் பகுதிக்கு சென்றுள்ளார், அப்பொழுது விறகு சேகரிக்கும் இடத்தில் ஏதோ ஒன்று அங்கு  புதைக்கப்பட்டது போல் தென்பட்டுள்ளது. பின் உடனடியாக அவர் கீழக்கரை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கீழக்கரை துணை கண்காணிப்பாளர்ம அது ருகேசன் தலைமையில் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன், தனிப் பிரிவு தலைமைக் காவலர் முத்துச்செல்வம் மற்றும் காவலர்கள் உடனடியாக  அந்த இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் புதைக்கப்பட்டது போல் இருந்த மண்ணை காவல்துறையினர் தோன்றியதில்   அக்குழியில் இரு சக்கர வாகனம் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் அந்த வாகனத்தை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரனை செய்ததில் புதைக்கப்பட்டிருந்த வாகனம்  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காஞ்சிரங்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் என்பதும், கடந்த சில மாதங்களாக அவரது உறவினரான மதியழகன் என்பவர் அனுபவித்து வந்திருந்த நிலையில்  கடந்த 6 மாதத்திற்கு முன்பு வாகனம் தொலைந்து விட்டதாக கீழக்கரை காவல் நிலையத்தில் மதியழகன் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தை திருடி மண்ணுக்குள் புதைத்தது யார் என விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

கீழை நியூஸுக்காக..

SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!