18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 144 தடை உத்தரவு எதிரொலி …செங்கம் பகுதியில், வாழைக்கு விலை கிடைக்காததால் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வேதனை..

144 தடை உத்தரவு எதிரொலி …செங்கம் பகுதியில், வாழைக்கு விலை கிடைக்காததால் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வேதனை..

எழுதியவர்: Askar March 30, 2020, 9:15 pm

144 தடை உத்தரவு எதிரொலி … செங்கம் பகுதியில், வாழைக்கு விலை கிடைக்காததால் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வேதனை..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் வாழை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக செங்கம் அருகே உள்ள பரமனந்தல் குப்பநத்தம் கொட்டாவூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழைகளை சாகுபடி செய்து வருகின்றனர் . தற்போது வாழைத்தார்கள் மலிவு விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். மீதமுள்ள வாழையில் உள்ள தார்கள் வாங்க மறுத்து வருவதால் வாழை விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். வியாபாரிகள் பல்வேறு பிரச்சனை காரணம் காட்டி வாழைத்தார்களை வாங்குவதை மறுத்து வருகின்றனர். இதனால் தயாரான நிலையில் பிற மாவட்டங்களுக்கும் மாநிலம் மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதில் 144 தடை உத்தரவால் இன்னும் பல நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதால் வேளாண் விற்பனை கமிட்டி மூலம் கட்டுப்படியான விலையில் விவசாயம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கூறுகின்றனர் .144 தலை உத்தரவால் பல ஆயிரம் செலவு செய்த நிலையில் விவசாயிகள் கடும் மன உளைச்சல் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமல்லாமல் வாழ்வாதாரமே இழந்த நிலையில் உள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!