18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தீயணைப்புத் துறை வாகனத்தின் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

நிலக்கோட்டையில் தீயணைப்புத் துறை வாகனத்தின் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

எழுதியவர்: mohan March 30, 2020, 3:34 pm

நிலக்கோட்டையில் வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தெருக்கள் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிப்பது வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து நிலக்கோட்டை க்கு வந்தவர்களின் கண்காணிப்பது என்பது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கோட்டை பேரூராட்சி நிர்வாகமும் நிலக்கோட்டை தீயணைப்பு படை துறையினரும் இணைந்து நகர்புறங்களில் கிருமிநாசினி மருந்து தயாரிக்கும் பணி நடந்தது. அதுவும் தீயணைப்பு வண்டி மூலம் மருந்து தெளிப்பு நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய ஜோசப் மற்றும் வீரர்கள் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!