18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை.

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை.

எழுதியவர்: mohan March 30, 2020, 2:45 pm

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தீவிரமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் ஆங்காங்கே தேவையின்றி சுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் இரவு பகலாக காவல் காத்துவரும் காவலர்களுக்கு ஏதேனும் நோய்த்தொற்று உள்ளதா என சோதிப்பதற்காக நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனமொன்று மதுரை மாநகர் முழுவதும் சுற்றி வருகிறது.  மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள காவலர்களுக்கு நோய்த்தொற்று ஏதேனும் உபாதைகள் உள்ளதா என கண்டறியும் சோதனை மருத்துவர்கள் சோதனை செய்தனர். மேலும் அவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் அதற்கு ஏற்ற மருந்து மாத்திரைகளை உடனடியாக வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!