உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களாக ஊரடங்கை மதிக்காமல் சந்தை பகுதியில் கூடிய மக்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்று முதல் காய்கறி சந்தை அரசுப்பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.கொரோனா பாதிப்பு
எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த காய்கறி மார்கெட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிகப்படியான மக்கள் கூடினர்.இந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின்பேரில் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் இன்று முதல் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு பொதுமக்களும் வரவேற்பு அளித்து அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள சமூக இடைவெளியில் நின்று முக கவசம் அணிந்து வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
உசிலம்பட்டி – காய்கறி சந்தை அரசுப்பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது
எழுதியவர்: mohan March 30, 2020, 12:37 pm




You must be logged in to post a comment.