18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கெட்டிமேளம் இல்லை.. நாதஸ்வர சத்தம் இல்லை.. அரசாங்க வழிகாட்டுதலின் படி எளிமையான முறையில் நடைபெற்ற திருமணம்..

கெட்டிமேளம் இல்லை.. நாதஸ்வர சத்தம் இல்லை.. அரசாங்க வழிகாட்டுதலின் படி எளிமையான முறையில் நடைபெற்ற திருமணம்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2020, 12:16 pm

மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் அருகே உள்ள ராமையா தெருவில் இன்று (30/03/2020) ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது,  இந்நிலையில் 144 தடை உத்தரவு பெற்ற காரணத்தினால் என்ன செய்வது என்று புரியாமல் இருந்த நிலையில், யாரும் வரமுடியாத சூழலில் உறவினர்கள் யாரும் வரமுடியாத சூழலில் எளிமையான முறையில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

ஆகையால் சுமார் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டு எளிமையான முறையில் போதிய இடைவேளை விட்டு அனைவரும் முக கவசம் அணிந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.  மேலும் மேளம் கொட்டாமல், நாதஸ்வரம் இல்லாமல் மிக அமைதியான முறையில் திருமணம் நடைபெற்றாலும், அனைவரின் பாதுகாப்பு கருதி எளிமையாக நடைபெற்றது அனைவருக்கும் மன நிறைவை தந்தது.

IMG_9941

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!