மதுரையில் உள்ள ஆதாரவற்றோர்களுக்கு பொதுமக்கள் உதவிட முன்வரவேண்டும் என்று மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன். கடந்த சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மக்கள் அரிசி, பருப்பு, சமையல் உபகரணங்கள் உட்பட பொருள்களை நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் அளித்தனர்.
அதனை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சுற்றிலும் கட்டிடப்பணிகள் மற்றும் கூலிவேலை செய்துவந்த 20க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழங்கி உதவி செய்தனர்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் இதற்கு உதவிய பொதுமக்களையும், போலீசாரையும் வெகுவாக பாராட்டினார்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.