17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டையில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி நலத்திட்ட உதவி..

சுரண்டையில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி நலத்திட்ட உதவி..

எழுதியவர்: Askar March 29, 2020, 6:42 pm

சுரண்டையில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி நலத்திட்ட உதவி..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தலைமையின் கீழ் இயங்கும் சுரண்டை நல்ல சமாரியன் கிளப் மற்றும் சுரண்டை ஓய்எம்சிஏ சார்பில் வறுமையில் வாடுபவர்கள்,  ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர்கள், கணவனை இழந்தோர் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் என சுமார் 100 குடும்பங்களுக்கு  இரண்டு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வீகேபுதூர் தாசில்தார் ஹரிகரன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி அனுமதியுடன் பயனாளிகள் இல்லத்திற்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை நல்ல சமாரியன் கிளப் கௌரவ ஆலோசகர் தொழிலதிபர் எஸ்.வி.பழனிச்சாமி, தலைவர் பொன்ராஜ், வசந்த், ஆல்பர்ட், அன்னப்பிரகாசம், ஜெகதீஸ், செல்வின், அந்தோணி சவரிமுத்து ஆகியோர் ஆலோசனை பேரில் ஓய்எம்சிஏ தலைவர் ஏஎஸ்ஏஆர் பாலச்சந்திரன் தலைமையில் சுரண்டை நல்ல சமாரியன் கிளப் செயலாளர் கிருபாகரன், பொருளாளர்,ஜேம்ஸ் அழகுராஜா, கௌரவ ஆலோசகர் சி.ஜேக்கப், மங்களம் டயர்ஸ் ஸ்டீபன் ரத்தீஸ், கிளாசிக் பாலிபேக்ஸ் சுவீகர், ஆபிரகாம், சின்னத்துரை, தனபால் ராஜசேகர், சரோன் உள்ளிட்டோர் 100 குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நலத்திட்ட உதவிகள் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்டீபன் ஜெபராஜா, ஸ்டெல்லா ஆபிரகாம்.டேவிட், அருள்ராஜ், பிரைசன் பால், நல்ல சமாரியன் சட்ட ஆலோசகர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், தினகரன்,  செல்வகுமார், பிராங்கிளின், தவமணி சொக்கையா, ஏஎஸ்ஆர் ராஜன், ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!