கொடைக்கானலில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு பணியில் கடந்த 5−நாட்களாக அரசுத் துறையினர்,தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியோர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாக கடந்த வாரம் சந்தை நடைபெறவில்லை இந்நிலையில் இந்த வாரம் சந்தை நடைபெறும் பி.டி.சாலையில் வாரச் சந்தை நடைபெறவில்லை இதற்கு பதிலாக அண்ணா சாலை,மூஞ்சிக்கல்,காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது. காலை 9−மணி முதல் மதியம் 12−மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பொது மக்கள் அதிக அளவில் கூடினர். இதனால் 50−க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காய்கறிகள் விலை வழக்கத்திற்கு மாறாக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டது.தக்காளி ௫60, கத்தரிக்காய்,70,பீன்ஸ் 120−பீட்ரூட்100,அவரைக்காய் ரூ 80,தேங்காய் ஒன்று 50−பட்டாணி ரு60,சின்ன வெங்காயம் ௫140,பெரிய வெங்காயம் 100,என அனைத்து காய்கறிகளையும் வியாபாரிகள் தங்களது இஷ்டம் போல விற்பனை செய்ததால் அவற்றை வாங்கும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே நகராட்சி மற்றும் வருவாய்த்துறை,தோட்டக்கலைத்துறையினர் அதிகமாக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கமாக பனியில் உறையும் மக்கள்; காய்கறிகளின் வரலாறு காணாத “விலை”யால் அதிர்ச்சியில் உறைந்தனர்..
எழுதியவர்: Askar March 29, 2020, 6:34 pm




You must be logged in to post a comment.