18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அண்ணாநகர் பகுதியில் தீ விபத்து ரூ.2 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல்..

மதுரை அண்ணாநகர் பகுதியில் தீ விபத்து ரூ.2 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல்..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2020, 3:06 pm

மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில் அருகே அமிர்தாஞ்சன் மருந்து பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் வைத்திருந்த குடோன் செயல் பட்டு கொண்டிருந்தது. இந்த குடோனில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அமிர்தாஞ்சன் தென் மாவட்ட விற்பனை பிந்திநிதியாக ஆந்திராவை சேர்ந்த சிவலிங்க பிரபாகர் உள்ளார். இந்த குடோனில் ரூ.5 லட்சத்துக்கும் மேலான அமிர்தாஞ்சன் மருந்து பொருட்கள், குளிர்பானங்கள் ஸ்டாக் வைத்ததாக கூறப்படுகிறது.

இங்கு இன்று (29/03/2020)  காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் 15 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

அமிர்தாஞ்சன் மருந்து பொருட்கள் என்பதால் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். கரும்புகை அதிகளவு வந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்குள்ளான கட்டிடத்தில் முன் பக்கம் உள்ள கடைகளை உடைத்தும் தீயை அணைத்து வருகின்றனர்..

அருகில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் நிறைந்து உள்ளதால் அப்பகுதி முழுவதும் மக்கள் போக்குவரத்திற்கு தடை விதித்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மதுரை அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!