இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே கானாட்டாங்குடி, சோழியகுடி, திருப்பாலைக்குடி பாண்டி கோவில் உள்ளட்ட பகுதிகளில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தோர் கடந்த பல ஆண்டுகளாக தங்கி சொந்தமாக ஐஸ் தயாரித்து தெருக்களில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
கொரானா நோய் தொற்று பரவலையடுத்து மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனை யடுத்து இவர்களின் ஐஸ் தொழில் முற்றிலும் பாதித்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர். தங்களுக்கு உதவ வேண்டும் என இவர்களது கோரிக்கை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி, ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி வழிகாட்டுதல்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிவாரண உதவியை ஜூனியர் ரெட் கிராஸ் இராமநாதபுரம் மாவட்ட செயலர் எம். ரமேஷ் தலைமையில் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கணேசன், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் கண்ணதாசன், கிராம நிர்வாக அலுவலர் முருகன், இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் ரமேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.




You must be logged in to post a comment.