18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனோ.. ஊரடங்கு…பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை… வெயிலில் வாடும் பொதுமக்கள்..

கொரோனோ.. ஊரடங்கு…பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை… வெயிலில் வாடும் பொதுமக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2020, 12:40 pm

கடந்த சில வருடங்களாகவே பொதுமக்களுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சினை தொடர்ந்த வண்ணம் உள்ளது. பண மதிப்பிழப்பு, குடியுரிமை சட்டம் என தொடர்ந்த வேளையில் கொரோனா வைரஸ் என்ற பேரிடி இறங்கியுள்ளது. தனிமைப்படுத்தல் என்ற அடிப்படையில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தாலும், சாமானிய மக்களின் அன்றாட பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்பட்டதா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

இதன் ஒரு பகுதியாக அன்றாட பொருட்களின் விற்பனை நேரங்கள் குறைக்கப்பட்டு, மக்களின் தேவைக்காக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர்ப் பகுதியில் இருக்கும் அனைத்து காய்கறி கடைகளும். அரசின் உத்தரவுப்படி கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பொதுமக்கள் காய்கறி ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக காய்கறிக் கடை முன்பாக நின்று வாங்கிக் கொண்டிருக்கிறாகள்.

எனவே அரசு உடனடியாக அவர்களுக்கு சாமியான பந்தல் போட்டு ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையாக நின்று காய்கறி வாங்கும் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

கீழை நியூஸுக்காக.. SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!