ஊடக தோழர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, உலகமே முடங்கி கிடக்கும் வேளையில், மனிதம்தான் பெரிது என்று மனித உயிர்களை காக்கும் நிகழ்வுகளை இரவு பகல் பார்க்காமல் தங்களது ஊடகங்களில் பதிவு செய்து உழைத்துக் கொண்டிருப்பது மக்களிடையே வானளவு நம்பிக்கையை கொண்டு சேர்த்திருக்கிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உங்களின் ஒப்புயர்வற்ற சேவையை பாராட்டும் இந்த வேளையில் ஒரு தோழர் என்ற முறையில் உங்களில் ஒருவன் என்ற முறையில் உங்களுக்கு சில செய்திகளை பகிர ஆசைப்படுகிறேன்*
1. நீங்கள் அனைவரும் தயவுகூர்ந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள்.
2. கோரோனா நோய் தொற்று சமூக பரவலாக மாறிக்கொண்டிருக்கிறது. இது பல்வேறு விளைவுகளை சிறிது காலத்தில் ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளவும். அது மிகப்பெரிய மானுட அழிவை ஏற்படுத்த வல்லது.அதனை கட்டுப்படுத்த சுய கட்டுப்பாடு மிக அவசியம் மிக அவசரம்.
3. கொரோனா தொற்று நமக்கு நோய் தொற்று உள்ளவர்களின் சுவாசப் பாதையில் இருந்து வெளிவரும் சுவாச நீர் திவலைகளால் பெரும்பாலும் பரவுகிறது.அது எங்கு வேண்டுமென்றாலும் நீக்கமற நிறைந்திருக்கும்.70% நோயின் அறிகுறிகள் இல்லாத, நோய் தொற்று உள்ள மனிதர்களிடமிருந்து சமூகத்தில் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே நீங்கள் காய்கறி கடைக்கு சென்றாலும், வீட்டை விட்டு வெளியே சென்று வந்தாலும் தலை முதல் கால் வரை நன்றாக குளித்து விட்டு வீட்டில் உள்ள பொருட்களை தொடுவது, வீட்டில் உள்ளவர்களை தொடுவதை வைத்துக்கொள்ளுங்கள்.அதுவும் வீட்டிலேயே சமூக இடைவெளியை பின் பற்றுவது சால சிறந்தது. ஆயிரம் மடங்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
தனித்திரு, விழித்திரு..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன்
நோயற்ற வாழ்வை தந்து அருள்புரிவானாக என யூ.நூருல் அமீன், மக்கள் பாதை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் மாவட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




You must be logged in to post a comment.