17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் மக்கள் ஊரடங்கை மதிக்காமல் கறிக்கடை, மளிகைக்கடைகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்.

உசிலம்பட்டியில் மக்கள் ஊரடங்கை மதிக்காமல் கறிக்கடை, மளிகைக்கடைகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்.

எழுதியவர்: mohan March 29, 2020, 11:06 am

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் 144தடை மற்றும் மக்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் வழக்கம் போல் இருசக்கரவாகனம், ஆட்டோக்கள் இயங்கின. மேலும் கறிக்கடைகளில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளபடாமல் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக பிராய்லர், ஆட்டுக்கறி, மீன் உள்ளிட்டவைகளை வாங்கிசென்றனர்.

இதே போல் மளிகை கடைகளிலும் கூட்டம் கூட்டமக பொருட்கள் பொருட்கள் வாங்கி சென்றனர்.இவர்களை போலிசார் அவ்வப்போது எச்சரித்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு எச்சரித்தாலும் போலிசார் சென்ற பின் மீண்டும் கூட்டம் கூடினர்.கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதில் போலிசார் திணறினர்.கொரோனா பயம் காரணமாக கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொரோனாவை மறந்து அசைவம் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டி கூட்டம் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!