18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு ..

பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு ..

எழுதியவர்: mohan March 29, 2020, 10:31 am

காவல் ஆணையர் .டேவிசன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி 144 ஊரடங்கு தடை உத்தரவு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு காவலர் மருத்துவமனை மருத்துவர் செ. கீதா  தலைமையில் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடத்திற்கே சென்று அவர்களது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பம் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் மருந்து மாத்திரைகளை வழங்கியும் போதிய உடல் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை வழங்கியும் வருகின்றார்கள். இந்த மருத்துவக் குழுவினர் நாள் ஒன்றுக்கு 160 காவலர்களுக்கு பரிசோதனை செய்கின்றனர். மருத்துவக் குழுவினரின் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிசன் தேவாசீர்வாதம்  தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!