18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காற்றில் பறக்கும் 144 தடை உத்தரவு! மதிக்காத வியாபாரிகள்: கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள்!

காற்றில் பறக்கும் 144 தடை உத்தரவு! மதிக்காத வியாபாரிகள்: கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள்!

எழுதியவர்: Askar March 29, 2020, 10:10 am

காற்றில் பறக்கும் 144 தடை உத்தரவு! மதிக்காத வியாபாரிகள்: கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள்!

செங்கம்-போளூா் சாலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மளிகை மொத்த வியாபாரக் கடையில் பொருள்கள் வாங்க திரண்ட சில்லறை வியாபாரிகள். செங்கம் நகரில் போலீஸாரின் கண்காணிப்பை மீறி மளிகைக் கடை மொத்த வியாபாரிகள் கிராமபுற விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்து மொத்த வியாபாரம் செய்து வருவதால் கூட்டநெரில் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

செங்கம் பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரிகள் கிராமப்புறங்களில் உள்ள சில்லறை வியாபாரிகளை காலையில் கடை திறப்பதாக தகவல் கொடுத்து வரவழைத்து கூட்டம் கூட்டமாக கடையின் முன் நிற்கவைத்து வியாபாரம் செய்கிறாா்கள்.

போலீஸாரின் வாகனம் வரும் போது மறைந்து கொள்கிறாா்கள், வாகனம் சென்றவுடன் வியாபாரத்தை தொடா்கிறாா்கள்.

வியாபாரம் செய்தாலும் கரோனா வைரஸ் தடுப்பு முறைகளின்படி கட்டம் போட்டு ஒருவருக்கு ஒருவா் இடைவெளி விட்டு நிற்க வைத்து வழங்கினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

ஆனால், அதைப் பற்றி வியாபாரிகள் கண்டுகொள்ளாமல் வழக்கம் போலவே வியாபாரத்தை தொடா்கிறாா்கள். சில்லரை வியாபாரிகளும் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, கூடுதல் விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்தில் மளிகைப் பொருள்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா்.

மேலும், செங்கம் பகுதியில் உள்ள மளிகைக் கடை, காய், கனி கடை, மருந்துக் கடைகளில் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், கூட்டத்தை கூட்டி மொத்த வியாபாரம் செய்யும் கடைகளை கண்டறிந்து அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செங்கம் நகர மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!