வேலூர் அடுத்த காட்பாடி பர்னீஸ்வரத்தை சேர்ந்த 49 – வயது பாதிரியார் ஒருவர் கடந்த 8ம் தேதி லண்டனிலிருந்து வீடு திரும்பினார். சென்னை விமான நிலைwத்தில் அவரை சோதனை செய்த எந்த நோய் அறிகுறியும் இல்லை என்பதால் பர்னீஸ்வரத்தில் தங்கினார். ஆனால் நேற்று முன்தினம் அவருக்கு மூச்சு திணறல் காய்ச்சல் ஏற்பட்டதும் உடனடியாக வேலூர் CMC மருந்துவமனை கொரானோ சிகிச்சை பிரிவில் சேர்ந்து பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவியும் தனிமை படுத்தப்பட்டு இருக்கிறார். பாதிரியார் கடந்த சில தினங்களில் யார் யாரை சந்தித்தார் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் பர்னீஸ்வர பகுதி மக்கள் கொரானோ பீதியுடன் உள்ளனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.