17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நமது அஜாக்கிரதை நமக்கு மட்டும் அல்ல ஊருக்கே உலை வைத்துவிடும்:-மக்களே அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்; ‘கீழை நியூஸ்’ & ‘சத்திய பாதை’ இதழின் நிறுவனரும் WJUT யின் மாநில இணைச் செயலாளருமான ‘செய்யது ஆப்தீன்’ வேண்டுகோள்.. 

நமது அஜாக்கிரதை நமக்கு மட்டும் அல்ல ஊருக்கே உலை வைத்துவிடும்:-மக்களே அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்; ‘கீழை நியூஸ்’ & ‘சத்திய பாதை’ இதழின் நிறுவனரும் WJUT யின் மாநில இணைச் செயலாளருமான ‘செய்யது ஆப்தீன்’ வேண்டுகோள்.. 

எழுதியவர்: Askar March 29, 2020, 1:56 am

நமது அஜாக்கிரதை நமக்கு மட்டும் அல்ல ஊருக்கே உலை வைத்துவிடும்:-மக்களே அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்; கீழை நியூஸ் & சத்திய பாதை இதழின் நிறுவனரும் ‘தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்’ மாநில இணைச் செயலாளருமான ‘செய்யது ஆப்தீன்’ வேண்டுகோள்..

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். என கேட்டுக்கொள்ளப்பட்டனர். 21 நாட்களுக்கு வீட்டில் விழித்திரு, தனித்திரு, விலகி இரு… என்று நமது மாநில முதலமைச்சரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார், இருந்தாலும் தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அஜாக்கிரதையாகவும் அசால்டாகவும் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. இப்படி வருபவர்களை போலீசார் தாக்கும் காட்சிகளையும் காணமுடிகிறது வருமுன் காப்போம் என்பது சிறந்த அறிவுக்கு அடையாளம் ஆகையால் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை ஏற்று தனித்திருங்கள், விலகியிருங்கள், விழிப்புடன் இருங்கள், தமிழக அரசுக்கும் மாநில காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோள்சில அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடிய சூழல் உள்ளது அப்படி வெளியே வராமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு தேவையான வீட்டுப் பொருட்களை அவர்கள் வீடு தேடி சென்று அடைய தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதே போன்று தேவைக்கு வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை போலீசார் அடிப்பதும் தாக்குவதும் கண்டனத்திற்குறியது. யார் எதற்காக வெளியே வருகிறார்கள் என்பதை தீர விசாரித்து பிறகு நடவடிக்கை எடுங்கள்.என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!