சமூக விலகல் கடைபிடிப்புடன் சுரண்டையில் மளிகை கடை, காய்கறி கடைகள் இயங்கியது-அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு..
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு மிக அத்தியாவசிய தேவைகள் கிடைக்கும் பொருட்டு சுரண்டையில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 1 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்திருக்கும் எனவும், கூட்டம் கூடாமலும், சமூக பாதுகாப்பிற்காக 3 அடி இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்க தென்காசி ஆர்டீஓ மார்ச்.27 வெள்ளிக்கிழமை அன்று ஆலோசனை வழங்கினார்.
அதன் படி பழைய மற்றும் புதிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தது.
பொது மக்கள் மிக குறைவான அளவே வந்தனர். கடைகளில் கூட்டம் இல்லை பெரும்பாலும் சமூக விலகலை கடைபிடித்தனர். சோப்பு போட்டு கைகளை கழுவிய பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வீகே புதூர் தாசில்தார் ஹரிகரன், சுரண்டை காவல்துறை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அபுல் கலாம் ஆசாத் காலை முதலே அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.