17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..

எழுதியவர்: Askar March 29, 2020, 12:49 am

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..

தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில், இந்நதியாவின் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: உலகமெங்கும் பரவலாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திட குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன்படியும், தொற்றுநோய்கள் சட்டம் 1897-ல் ஷரத்து 2-ன்படியும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியவாசிய தேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பெரிய காய்கறி மார்க்கெட்/சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி /பழ வகைகளை விற்கும் கடைகள் மற்றும் மளிகைகடை, மருந்துகடை செல்லும் பொதுமக்கள் சமூகவிலகல் படி 3 அடி தூரம் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கொரோனோ நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பின் 2 வாரங்களுக்குப் பின்பே அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது. ஆனால் அறிகுறிகள் இல்லாத சமயத்திலும் கூட பிறருக்கு நோயினைப் பரப்ப வாய்ப்புள்ளது.

பாதிக்கப்பட்ட தனி மனிதர்களிடமிருந்து நேரடிதொடர்பின் மூலம் அவர்கள் பயன்படுத்திய /தொடர்பு கொண்ட பொருட்கள் உதாரணமாக கைப்பிடிகள், கதவுகைப்பிடிகள் முதலியவை மூலம் பரவ இயலும். எனவே வெளிநாடு அண்டை மாநிலங்கள் சென்று திரும்பியவர்கள், அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவதன் மூலமே நோய்த் தொற்று மேலும் பிறருக்கு பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய இயலும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!