18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை.. இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுரை.. ஒலி வெளியீடு..

கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை.. இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுரை.. ஒலி வெளியீடு..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2020, 11:44 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுரை. இதை ஒலியாக வெளியிட்டுள்ளார்.  இன்று (28.3.2020) அவர் விடுத்துள்ள ஆடியோ உரை:

https://youtu.be/FxhPIIgFp14 அனைவருக்கும் வணக்கம். நான் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகிறேன். கொரானா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய முக்கிய தருணம் இது. கொரானா வைரசால் மக்களுக்கு பாதிப்பு வராமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் உத்தரவு அடிப்படையில் அலுவலர்கள் வெளியில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். நாட்டு நலனுக்காக, நம்முடைய நலனுக்காக பொதுமக்கள் அனைவரும் தயவு செய்து வீட்டிலேயே இருக்குமாறு நான் அன்பாக கேட்டுக்கொள்கிறேன். சாதாரணமாக சோப் போட்டு கைகளை கழுவினாலே அழியக்கூடிய இந்த கொரானா வைரஸ் கிருமி நாம் அலட்சியமாக இருந்தால் உயிரையே கொல்லும். இதிலிருந்து நம்மை பாதுகாக்க அடிக்கடி சோப் போட்டு கைகளை கழுவ வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். குறைந்தது 1 அல்லது 2 மீட்டர் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலர் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தேவையற்ற பயணங்கள் செய்து வந்து கொண்டிருக்கின்றனர். கொரானா வைரஸ் தொற்று ஒருவருக்கு வந்தாலே அதன் மூலம் ஆயிரம் பேருக்கு மேல் பரவக்கூடிய சூழ்நிலையில் நாம் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கைகளை சோப்பால்  அடிக்கடி கழுவி போதிய சமூக இடைவெளி கடைபிடித்தால் மட்டும் தான் கண்ணுக்கு தெரியாத இந்த கொரானா வைரஸ் பிணியின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற பயணங்கள் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!