18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் ஊரடங்கு உத்தரவால் பூக்களை பறிக்காமல் மல்லிகைப்பூவை கிராமத்திற்கு தானமாக வழங்கிய மல்லிகைப்பூ விவசாயிகள்.

மக்கள் ஊரடங்கு உத்தரவால் பூக்களை பறிக்காமல் மல்லிகைப்பூவை கிராமத்திற்கு தானமாக வழங்கிய மல்லிகைப்பூ விவசாயிகள்.

எழுதியவர்: mohan March 28, 2020, 4:11 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சந்தைப்பட்டி, கல்லூத்து, நக்கலப்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் மல்லிகைப்பூக்களை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் மல்லிகைப்பூ வரத்து அதிகரித்துள்ள நிலையில் மக்கள் ஊரடங்கு என்பதால் சாகுபடி செய்து பூசந்தைக்கு கொண்டு செல்லமுடியாமல் விவசாயிகள் தினறி வருகின்றனர். இதனால் மல்லிகைப்பூக்களை பறிக்காமல் அந்த கிராமத்தில் உள்ள மக்களின் தேவைக்கு பயன்படும் அளவிற்கு பூக்களை பறித்து செல்ல மல்லிகை விவசாயிகள் அனுமதித்துள்ளனர். மேலும் பூக்களை பறிக்கும் வருபவர்களை குறைந்த அளவே அணுமதிப்பதோடு. கொரோனா பீதியால் ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு நின்று பறிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் தினமும் ஒரு நபர் 1கிலோவிற்கு மேல் மல்லிகைப்பூவை பறித்துசெல்கின்றனர். இதனால் பூக்களை பறித்துசெல்லும் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சயடைந்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!