18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டிப் பகுதிகளில்ஊரடங்கு நாளில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டிப் பகுதிகளில்ஊரடங்கு நாளில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

எழுதியவர்: mohan March 28, 2020, 3:46 pm

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் தமிழகத்தில் ஏப் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் உன அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமப் பகுதிகளில் இளைஞர்கள் கொரோனா வைரஸின் வீரியத்தை உணராமல் பொது இடங்களில் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர்.முதல் 3 நாட்கள் எச்சரித்து அனுப்பிய போலிசார் இன்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி பெரியசெம்மேட்டுப்பட்டி மேக்கிலார்பட்டி மெய்யணம்பட்டி ஆகிய கிராமங்களில் பொது இடங்களில் ஒன்று கூடிய 40 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் உசிலம்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!