18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கள்ளிப்பால் சிசு கொலை. வேலூர் அணைக்கட்டிற்கு முதல் அவமானம்

கள்ளிப்பால் சிசு கொலை. வேலூர் அணைக்கட்டிற்கு முதல் அவமானம்

எழுதியவர்: mohan March 28, 2020, 3:21 pm

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கல்லபாறை கிராமத்தை சேர்ந்த பெருமாளின் மனைவி ஜெயலட்சுமி (34) கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு 2 மகன்கள். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஹரி என்ற வாலிபருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்த ஹரி 4 மாதத்திற்கு முன்பு ஓடி விட்டான். அதனால் யாருடைய துணையின்றி கடந்த 20ம் தேதி வீட்டில் ஜெயலட்சுமி பெண் குழந்தையை பெற்றுள்ளார். ஆனால் மறுநாளே கள்ளிப்பாலை ( எருக்கம் செடி) குழந்தைக்கு ஊற்றி கொன்று கோணிப்பையில் கிணற்றில் வீசி விட்டு வந்து உள்ளாள். அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்த பொதுமக்கள் வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இறந்த பெண் சிசுவை கைப்பற்றி ஜெயலட்சுமியை கைது செய்தனர்.வட மாவட்டம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் கள்ளிப்பாலை ஊற்றி பெண் சிசுவை கொலை செய்வார்கள் ஆனால் வேலூர் மாவட்டத்தில் முதன் முறையாக இந்த பெண் சிசுகொலை நடந்து உள்ளது.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!