அரியலூரில் கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்திய மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணிநீக்கம்:
அரியலூர் அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த 20-ம்தேதி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவரின் ரத்தமாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது._
அப்போது இம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
நேற்றுமதியம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது செல்போனை வாங்கி மருத்துவ தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் ஒரு ஆண் என 3பேர் பயன்படுத்தியதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் பணிநீக்கம் செய்துள்ள அதிகாரிகள், அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 14 நாட்கள் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.