17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

எழுதியவர்: mohan March 28, 2020, 10:55 am

144 தடை உத்தரவை மீறுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  மதுரை மாநகர் முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்களின் நடமாட்டங்களை கண்டறிய உத்தரவிட்டார்கள். அதன்படி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறை சொல்லும் அறிவுரைகளை யாரும் கேட்காமல் இன்னும் பல பொதுமக்கள் கவனக் குறைவாகவும் அலட்சியமாகவும் விழிப்புணர்வு இல்லாமலும் சாலை மற்றும் வீதிகளில் நடமாடி வருகின்றார்கள்.கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலில் இருந்து மதுரை மாநகர மக்களை காப்பாற்றுவதற்காக காவல் ஆணையர்  பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களாகிய உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே காவல்துறைக்கு பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!