17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மீனவர் 800 பேர் தமிழக- கர்நாடகா எல்லையான சத்தியமங்கலம் சோதனை சாவடியில் தவிப்பு..

இராமநாதபுரம் மீனவர் 800 பேர் தமிழக- கர்நாடகா எல்லையான சத்தியமங்கலம் சோதனை சாவடியில் தவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2020, 10:31 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் 20க்கும மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள்  கர்நாடகா மாநிலம், மங்களூரு கடல் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்போது கொரானா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25 ஆம் தேதி அமலுக்கு வந்தது. 144 தடை உத்தரவினால் மங்களூருக்கு சென்ற மீனவர் 800க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கு கடந்த சில தினங்ளாக பரிதவித்து வந்தனர்.

இவர்கள் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து அரசின் உத்தரவிற்கு காத்திருந்தனர். அரசு உத்தரவையடுத்து, அங்கிருந்து ஏராளமான வாகனங்களில் கர்நாடகா போலீசார் பாதுகாப்புடன் இன்று காலை புறப்பட்டு தமிழக-கர்நாடக எல்லையான சத்தியமங்கலம் வாகன சோதனை சாவடிக்க மாலை வந்து சேர்ந்தனர். அங்கு பரிதவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப  ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!