18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டையில் மளிகை, காய்கறி கடைகளை திறக்க அனுமதி-ஆர்டிஓ கூட்டத்தில் முடிவு..

சுரண்டையில் மளிகை, காய்கறி கடைகளை திறக்க அனுமதி-ஆர்டிஓ கூட்டத்தில் முடிவு..

எழுதியவர்: Askar March 27, 2020, 8:07 pm

சுரண்டையில் மளிகை, காய்கறி கடைகளை திறக்க அனுமதி-ஆர்டிஓ கூட்டத்தில் முடிவு..

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில் சமூக பரவலை தடுக்கவும், பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கவும், சுரண்டை வியாபாரிகள் சங்கம், காய்கனி மார்க்கெட் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம், சூப்பர் மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் வேலன் பவனில் வைத்து நடைபெற்றது.

தென்காசி ஆர்டிஓ பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதில் வியாபாரிகளின் பங்களிப்பு குறித்து விளக்கினார். சோப்பு போட்டு கரங்களை கழுவுதல், சமூக தொற்று ஏற்பட்டு விடாமல் 1 மீ இடைவெளி விட்டு நிற்பது, அவசியமின்றி வெளியே வராமல் இருப்பது குறித்து பேசினார்.

பின்னர் மளிகை கடை, காய்கறி கடைகளை, தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்தவும், கூடுமானவரை வாடிக்கையாளர்களை கடைக்கு வரவிடாமல் டோர் டெலிவரி செய்தல், டோர் டெலிவரி செய்பவர்கள் வெளியே வர அடையாள அட்டை பெறுதல், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கையாளுதல் குறித்து விளக்கி, கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைக்கும் படி கேட்டு கொண்டார்.

கூட்டத்தில் வீகேபுதூர் தாசில்தார் ஹரிகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, எஸ்ஐக்கள் சந்திரசேகர், ஜெயராஜ், துணை தாசில்தார் சிவன் பெருமாள், சுரண்டை பகுதி கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் மகாலட்சுமி, டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அபுல் கலாம் ஆசாத், ஆர்ஐ மாரியப்பன், விஏஒ பாலு, கிராம உதவியாளர்கள் கணேசன், கற்பகம், ஜேம்ஸ், வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் ஏடி நடராஜன், துணை தலைவர்கள் எம்ஏ துரை,  சிவசக்தி முத்தையா, ஆறுமுகம்,  ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் ஜேக்கப் பொருளார் அழகுசுந்தரம், மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சேர்ம செல்வம், தெய்வேந்திரன், சக்திவேல், வெற்றிவேல், விநியோகஸ்தர் சங்கம் லட்சுமணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!