18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 108 தொழிலாளர்களின் பாசப் போராட்டம்.. தன்உயிரையும்.. சொந்தத்தையும் பிணையாக வைத்து பணிபுரியும் அவர்களின் பாசக்குரலை கேளுங்கள்…

108 தொழிலாளர்களின் பாசப் போராட்டம்.. தன்உயிரையும்.. சொந்தத்தையும் பிணையாக வைத்து பணிபுரியும் அவர்களின் பாசக்குரலை கேளுங்கள்…

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2020, 7:05 pm

108 ஊழியர்களின் தாய் தந்தை இந்த வைரஸ் குறித்த காரணிகளால் எவ்வளவு பாதிக்கப்பட்டு அழுது புலம்புகிறார்கள் மேலும் 108 ஓட்டுநர் என் உயிரே போனாலும் பரவாயில்லை நாட்டு மக்களை யார் காப்பாற்றுவார் என்று கூறி தன் தாய் தந்தையின் கோரிக்கையை நிராகரித்தார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒலியை  கேட்கும்போது கண்ணில் ஒரு துளி நீராவது வருவது நிச்சயம்.

தாய் பாசமும் தந்தை பாசமும் தோற்றுப் போயின மக்கள் பணியே மகத்தானது மகன் கூறிய பாசப் போராட்டத்தை நீங்களும் கேளுங்கள்.

இந்த காணொளியை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர் குடும்பத்தனர் எழுதிய கோரிக்கையாக சமூக வலைதளங்களில் கீழே உள்ளது வெளியாகியுள்ளது.

//எங்களை போன்ற அனைத்து 108 தொழிலார்களின் நிலைமை இது தான், நாங்கள் வருத்தப்படுவததோ, இல்லை கவலைப்படுவததோ அது முக்கியம் இல்லை. எங்கள் நோக்கம் மக்களை காப்பற்றுவது மட்டுமே, அது மட்டுமே எங்கள் தலையாய கடமை, எனவே எங்கள் தாய் தந்தைக்கு பதில் கூட சொல்ல எங்களுக்கு நேரம் காலம் இல்லை. ஆகவே நாங்கள் சொல்வது ஒண்ணே ஒன்று தான் நீங்கள் பத்திரமாக வீட்டிற்குள் இருந்தால் போதும். எங்களை பற்றி கவலை படவேண்டாம், நாங்கள் இருக்கும் வரை எந்தவிதமான நோய் ஆக இருந்தாலும் மக்களை காப்பாற்ற பாதுகாப்பாக இருப்போம். நாங்கள் உழிரோடு இருந்தால் சந்திக்கலாம், இல்லையேல்  மகன்/மகள் இந்த நாட்டுக்காக மக்களுக்காக உழிர் தியாகம் செய்தான் என்று எங்களை மறந்துவிடுங்கள். இது என் போன்ற அணைத்து 108 தொழிலார்களின் குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் !!!!!

இவண் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலார்களில் ஒருவன்.

செய் அல்லது! செத்து மடி !

உழிர் மக்களுக்கு ! உடல் குடும்பத்திற்கு ! என்ற தாரக மந்திரமே எங்கள் சேவையின் நோக்கம். நன்றி !!!!!!! //

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!