17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்ய புதிய காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்ய புதிய காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

எழுதியவர்: mohan March 27, 2020, 5:05 pm

*காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்காகவும் மற்றும் அவர்களது குறைகளை கேட்டறிவதற்காகவும் இன்று 27.03.2020- ம் தேதி மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்கள். இந்த காவல் கட்டுப்பாடு காலை 9.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். இந்த காவல் கட்டுப்பாடு அறை திறந்ததின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காவல் ஆணையர் அவர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்கள்.

காவல் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் 0452-2531044, 0452-2531045 பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே காவல்துறையை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அனைத்து தேவைகள் மற்றும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!