18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில், சுகாதாரத் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் 1076 பேர் சுற்றி வளைப்பு…

தென்காசி மாவட்டத்தில், சுகாதாரத் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் 1076 பேர் சுற்றி வளைப்பு…

எழுதியவர்: Askar March 27, 2020, 4:44 pm

தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் 1076 பேர் சுற்றி வளைப்பு…

தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள 1706 பேர் சுகாதார துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் குவைத், சவுதி அரேபியா, கத்தார், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் பெரும்பான்மையோர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள காலகட்டத்தில் அவர்கள் இங்கு வந்துள்ளதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில் 40 பேரும், கீழப்பாவூர் பகுதிகள் 80 பேரும் , கடையம் பகுதியில் 20 பேரும்,, தென்காசி பகுதியில் 165 பேரும், செங்கோட்டை பகுதி 146 பேரும், கடையநல்லூர் பகுதியில் 311 பேரும், வாசகங்கள் வாசுதேவநல்லூர் பகுதியில் 141 பேரும், சங்கரன்கோவில் பகுதியில் 82 பேரும், குருவிகுளம் பகுதியில் 53 பேரும், சேர்ந்தமரம் பகுதியில் 38 பேரும் ஆக மொத்தம் 1076 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து உள்ளனர். இவர்கள் திருவனந்தபுரம், கொச்சி , மதுரை, திருச்சி, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் ஏதாவது ஒரு விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கக்கூடாது என்பதற்காக இவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!