இந்தியா முழுவதும் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அத்யவாசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு சார்பில் கேட்டுக்கொண்hடலும் இளைஞர்கள் உத்தரவை
மதிக்காமல் ஊரடங்கு நாளை ஜாலி ரைடு ஆக (மகிழ்ச்சிப்பயணம்) நினைத்து ஊரைச்சுற்றி வருகின்றனர்.உசிலம்பட்டி பிரதான சாலைகளான மதுரை ரோடு பேரையூர் ரோட்டில் சென்றால் போலிசார் பிடிப்பார்கள் எனக்கருதி அதன் அருகிலுள்ள குறுறுகிய தெருக்களை தங்கள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.இது பற்றி போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அங்கு வரும் போலிசார் இவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.ஜாலி ரைடு செல்லும்;இளைஞர்கள் இது போன்ற குறுகிய தெருக்களை பயன்படுத்தி வருவதால் போலிசார் அவ்வப்போது அவர்களைக் கண்டு அப்புறுப்படுத்துவதில் பெரும் சிரமதிற்கு உள்ளாகின்றனர்.
உசிலம்பட்டியில் ஊரடங்கு நாளில் ஜாலி ரைடு சென்றவர்களால் போலிசார் சிரமத்திற்கு உள்ளாகினர்.
எழுதியவர்: mohan March 27, 2020, 3:51 pm




You must be logged in to post a comment.