கொரோனா வைரஸ் தடுப்பு பணி-தன்னார்வ தொண்டர்கள் நியமனம்! மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் அடாவடி செயல்பாடு! TARATDAC உள்ளிட்ட மாற்று திறனாளிகள் அமைப்பினர் கண்டனம்..!
கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இது குறித்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை அமைப்புகள் முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறோம்.
இதில், முழு வெற்றி பெறும் வரை எங்களுடைய ஒத்துழைப்பு நீடிக்கும். அதே வேளையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக செயலாற்றி வரும் முன்னணி சங்கங்களை கலந்தாலோசிக்காமல் மாற்றுத்திறனாளிகள் ஆணையம் செயல்படுவது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
குறிப்பாக, இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காக பணியாற்றுவதில், அவர்களை புரிந்து கொள்வதில் அனுபவம் ஏதுமில்லாத மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை முழுமையாக அறிந்திராத பலரை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக “தன்னார்வ தொண்டர்கள்” என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகள் ஆணையகம் நியமித்துள்ளதை அறிகிறோம். அப்படி நியமிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு, சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவேற்றம் செய்த பிறகே, ஆணையகத்தின் செயல்பாடுகளை எங்களால் அறிய முடிகிறது. இவர்களால் எந்த அளவிற்கு உதவி செய்திட முடியும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, எங்களைப் போன்ற முன்னணி உரிமை அமைப்புகளை சிறுமைப்படுத்தும் நடவடிக்கையாகவே, மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தின் இந்த நடவடிக்கையை நாங்கள் கருதுகிறோம். மாற்றுத்திறனாளிகள் நலன்கள் விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும் என்ற விதியை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் பின்பற்றாததற்கு எங்களது கண்டனங்களை தெரிவிக்கின்றோம். எனவே, அடாவடியான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு, கொரோனா வைரஸ் தடுப்பு தொண்டர்கள் நியமனத்தில், முன்னணி மாற்றுத்திறனாளி அமைப்புகளை கலந்தாலோசித்து செயல்பட மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தை வலியுறுத்திக் கோருகிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
B.Jansirani – TARATDAC President Prof T.M.N. Deepak – President-. Dec-3 Movement P. Manoharan – Project Director,SZ,-NFB E.K. Jamal Ali – Association for the Deafசெய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.