மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 12 வார்டுகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய மாநில அரசுகள் 144
தடை மற்றும் ஏப்-14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது ஒருபுறம் இருக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு தெருவிடாமல் அனைத்து தெருகள் மற்றும் நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் அவ்வாறு வருபவர்கள் மீது காவல்த்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம், தெருத்தெருவாக கிருமிநாசினி தெளித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது
எழுதியவர்: mohan March 27, 2020, 3:24 pm




You must be logged in to post a comment.