மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி விவசாயத்திற்கு பெயர்பெற்ற பகுதி, முக்கியமாக மல்லிகை பூக்களை பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு உற்பத்தி செய்து வருகின்றனர், குறிப்பாக மதுரை என்றாலே மல்லி என பெயர் பெற இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் 70% உற்பத்தியே காரணம் என செல்லப்படுகிறது.தற்போது கொரோனா பாதிப்பு எதிரொலியாக 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக இல்ல விழாக்களோ, கோவில் திருவிழாக்களோ நடைபெறாத சூழலில் மல்லிகையின் விற்பனையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது,
வெளிநாடுகளுக்கு சென்ட் கம்பெனிகளுக்கு ஏற்மதிக்காக வாங்க வரும் வியாபாரிகளும் இந்த தடை காரணமாக வராத நிலையில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பெருமாள்பட்டி, விக்கிரமங்கலம், பூச்சிபட்டி, எழுமலை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பூக்கள் பரிக்காமல் செடிகளிலேயே கருகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கருகி போன செடிகளையும், பூக்களையும் வேதனையுடன் வெட்டி எடுத்தும் வருகின்றனர்,, அரசு இந்த மல்லிகை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே இந்த இழப்பு ஈடுசெய்ய முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.