17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களே கூட்டம், கூட்டமா கூடாதீக.!இந்தியாவை இத்திலியா ஆக்கிடாதீக..! தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், வேண்டுகோள்..

மக்களே கூட்டம், கூட்டமா கூடாதீக.!இந்தியாவை இத்திலியா ஆக்கிடாதீக..! தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், வேண்டுகோள்..

எழுதியவர்: Askar March 27, 2020, 3:14 pm

உலகையே அச்சுறுத்திக் கொண்டு மிகப் பெரிய கொள்ளை நோயாக மாறி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நல்லெண்ண நடவடிக்கைகளை பெரும்பாலான பொதுமக்கள் மதிக்காத சூழ்நிலையே தமிழகமெங்கும் நிலவுகிறது.

எனவே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர தமிழக அரசு அவசரகால அடையாள அட்டை வழங்கலாம். அவசரகால அடையாள அட்டை இன்றி வெளியே வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கலாம்.

ஒவ்வொரு பகுதியில் உள்ள சிறு, சிறு காய்கறி வணிக சந்தைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக கூடுவதை தவிர்க்க அவற்றை தற்காலிகமாக மூடி சில்லரை கடைகளில் மட்டும் காய்கறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கலாம்.

கோயம்பேடு போன்ற பெரிய காய்கறி வணிக சந்தைகளில் பொதுமக்கள் நுழைய தடை விதித்து வணிகர்களை மட்டும் அனுமதிக்கலாம்.

சாலைகளில், தெருக்களில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிவோரின் வாகனத்தை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதம் விதிக்கலாம்.

தேவையின்றி கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவோரை அருகில் இருக்கும் திருமண மண்டபங்களில் ஊரடங்கு முடியும் வரை அடைத்து வைத்து ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவளித்து தண்டனை வழங்கலாம்.

மத்திய, மாநில அரசுகளின் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிப்போம்.

கொரானா வைரஸை விரட்ட அனைவரும் சமூக விலகலை கடைபிடிப்போம்.

தனித்திருப்போம்..! விழித்திருப்போம்…!!

கொரானாவை துரத்தியடிப்போம்…!!!

அன்புடன் சு.ஆ.பொன்னுசாமி* (நிறுவனர் & மாநில தலைவர்.) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!