18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் சாலை ஓரத்தில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு பணியாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத்தலைவர்.

உசிலம்பட்டியில் சாலை ஓரத்தில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு பணியாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத்தலைவர்.

எழுதியவர்: mohan March 27, 2020, 2:57 pm

தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வராத சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிபப் பகுதகளில் வீதிகள் தோறும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் அலெக்ஸ் பாண்டி.இவர் உசிலம்பட்டி நகராட்சிப்பகுதியில் கண்ணன் தியேட்டர் எதிர்புறம் வசித்து வருகிறார்.இப்பகுதியில் கொரோனா தொற்று பரவமாலிருக்க நகராட்சிப்பணியாளர்களுடன் இணைந்து தனது சொந்த செலவில் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார்.ஊரடஙகு உத்தலவால் பெரிய உணவகங்கள் இல்லாத நிலையில் கையேங்தி பவனில் உணவு வாங்கி சாலை ஓரத்திலேயே பணியாளர்களுடன் பணியாளர்களாக சாப்பிட்டு விட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் அலெக்ஸ் பாண்டி.கொரோனா பெயரைக் கேட்டவுடன் மக்களோடு மக்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் வீதியில் இறங்கி களப்பணியாற்றும் இவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!