18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் இடம் பெயர்ந்த நடை பாதை கடைகள் அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரத்தில் இடம் பெயர்ந்த நடை பாதை கடைகள் அதிகாரிகள் ஆய்வு

எழுதியவர்: mohan March 27, 2020, 10:53 am

உலகெங்கும் கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குமிடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரானா வைரஸ் தொற்று அபாயத்தை தவிர்க்க அரண்மனை, சாலை தெருவில் இயங்கிய நடைபாதை கடைகளை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி இவ்விரு பகுதிகளில் செயல்பட்ட நடை பாதை கடைகள் மதுரை-ராமநாதபுரம் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கும், சின்னக்கடை பகுதியில் இயங்கிய நடை பாதை கடைகள் புதிய பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பு, கடைகள் முன் ஒரு மீட்டர் இடைவெளி கட்டம் அமைப்பு பணியை ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, வட்டாட்சியர் வி. முருகவேல், நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!