17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…..

கீழக்கரை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…..

எழுதியவர்: ஆசிரியர் March 26, 2020, 11:52 am

உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் கோரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் இன்று (26/03/2020)  தலைமை மருத்துவர் ஜவாகிர் உசேன் தலைமையில் மருத்துவர்கள் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளுக்கு ஒரு மீட்டர் இடைவெளியில் அமரச்செய்து.  பின் கைகளை சுத்தம் செய்ய தனியாக இடம் ஒதுக்கி அதன் பின்பு மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து,  மருந்துகள் வழங்கி வருகிறார்கள்.

இது போன்று அரசு துறை மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கை எடுக்கும் பட்சத்தில் கொரோனோ எனும் கொடிய நோயை துரத்தியடிக்கலாம்.

கீழை நியூஸ்காக SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!