தமிழக அரசு அமுல்படுத்தியுள்ள 144 தடை உத்தரவை முன்னிட்டு 21 நாட்கள் பொதுமக்கள் அனைவரும் அரசு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது காவல் ஆணையர் அவர்கள் குற்ற வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.
*இன்று 25.03.2020-ம் தேதி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி சாலை மற்றும் வீதிகளில் சுற்றித்திரிந்த 27 இரண்டு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன…
*அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தாங்கள் வசிக்கும் வீட்டின் அருகிலேயே எளிதில் கிடைக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது…
*உலக நாடுகள் கொரோனா வைரஸால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த உண்மை மதுரை மாநகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் போதிய விழிப்புணர்வு இல்லாமலும் வைரஸ் தொற்று நோயின் அபாயகரம் பற்றி அறியாமலும் அலட்சியமாகவும் இருந்து வருகிறார்கள் இதே நிலை நீடித்தால் நோய் தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது… *குடும்பத்தில் உள்ள பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து இந்த நோய் தொற்றிலிருந்து விடுபட வீட்டிலேயே இருக்க வேண்டும்…
* பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்ப நலனையும் நாட்டுமக்களின் நலனையும் சமுதாய நலனையும் மனதில் நினைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்..
* உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடிய வைரஸ் தொற்றினால் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்…
* மக்கள் தொகையிலும் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள நம் நாட்டில் இந்த நோய் தொற்று பரவினால் பாதிக்கப்படுவது நம் குடும்பமும் நம் குடும்ப உறுப்பினர்களும் தான் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகவே அதிலிருந்து நாம் அனைவரும் விடுபடுவதற்கு அரசு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றி ஒற்றுமையாக செயல்படுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்…
* அனைத்து மக்களும் காவல்துறையின் நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நோய் தொற்றிலிருந்து விடுபட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி ஒத்துழைப்பு தராமல் மீறி நடப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..
வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.