18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

பொதுமக்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

எழுதியவர்: mohan March 26, 2020, 11:34 am

தங்களுடைய பாதுகாப்பிற்காகவும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காகவும்வெளி இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து வீட்டில் மட்டுமே இருக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் ஒருவருக்கு நோய்தொற்று ஏற்பட்ட 14 நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்படுகிறது. ஆகவே, உடனடியாக நோய்தொற்று தெரிய வாய்ப்புக்கள் குறைவு. எனவே, அவ்வாறு நோய்தொற்று இருப்பது தெரியாமலேயே வெளியில் அவர்கள் செல்வதன் மூலமாக பிறருக்கும் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகவே, யாரும் வெளியில் செல்லவேண்டாம். பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நிற்பதால் சமூக பரவல் மூலம் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்..

வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை குடும்பத்தில் உள்ள ஒரு நபர் மட்டும் வெளியில் சென்று வாங்கிவிட்டு உடனே வீட்டிற்கு திரும்பவும். அவ்வாறு வெளியில் சென்றுவிட்டு வரும்போது கை மற்றும் கால்களை நன்கு சுத்தம் செய்தபின் வீட்டிற்குள் அனுமதிக்கவும்.

அனைவரும் கிருமி நாசினி சுத்திகரிப்பு திரவம் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்பது மிகவும் அவசியமானது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமான ஒன்று.

பொதுமக்களாகிய உங்களை பாதுகாக்கவேண்டியது காவல்துறையின் மிக முக்கியமான கடமையாகும்.

அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவுகளை அனைவரும் கடைபிடிக்கும்படியும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படியும் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!