17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை

தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை

எழுதியவர்: mohan March 26, 2020, 11:28 am

. இரண்டாவது நாளாக மதுரை மாநகரில் பிரதான சாலைகளில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை வாகனங்களும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வருகிறார்கள். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கையும் சிறப்பான முறையில் கவனித்து வருகிறார்கள். நோயின் தீவிரம் அறியாமல் என் வெளியே சுற்றுகிறார்கள்.நாங்கள் எங்களுக்காக சொல்லவில்லை. உங்களுக்காகத்தான் இவ்வளவு பாடுபடுகிறோம் என மிக வேதனையுடன் காவலர்கள் அவர்களிடம் கேட்டுக் கொண்டனர் .எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் கேட்டுக்கொண்டனர். கோரிப்பாளையம் பழங்காநத்தம் சிம்மக்கல் கீழமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் மதுரையில் பிரதான சாலையில் பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து தேவையின்றி உலா வரும் நபர்கள் எச்சரித்து மேலும் ஒலிபெருக்கி மூலமாகவும் நோயின் தீவிரத்தை எழுதி வருகிறார்கள். மக்கள் சுயக் கட்டுப்பாடுடன் இருந்தால் தான் இந்த நோயை போக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் இதை புரிந்து கொண்டு வீட்டிலேயே இருந்தால் சிறப்பாக இருக்கும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!