17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தொழில் போட்டி .. சிக்கன் பிரியாணி பிரியர்களுக்கு கொண்டாட்டம்..

தொழில் போட்டி .. சிக்கன் பிரியாணி பிரியர்களுக்கு கொண்டாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2017, 5:00 am

கீழக்கரையில் கடந்த சில வருடங்களாகவே பல புதிய உணவகங்களும், துரித உணவகங்களும் திறந்த வண்ணம் உள்ளன.  அதே போல் விசேஷ காலங்களில் தற்காலிக பிரியாணி கடைகளும் பல கடைத் தெருக்களில் முளைக்கும்.

கடந்த பல மாதங்களாக ஒரு சிக்கன் பிரியாணி 50 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்தது.  ஆனால் கடந்த சில தினங்களாக பல இடங்களில் ரூபாய் 40க்கும் கீழ் விற்கப்படுவதை காண முடிகிறது.  இதற்கு முக்கிய காரணம் பெருகி வரும் புதிய உணவகங்களும், கடுமையாக நிலவும் தொழில் போட்டியும் தான் என்பதை, கோழிக்கறியின் விலை ரூபாய்.200/- கு மேல் இருக்கும் போது பிரியாணி விலை 40க்கு விற்கும் பொழுதே தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் சிக்கன் பிரியாணி பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!