17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாதுகாப்பு கவசங்களுடன் காஸ் சிலிண்டர் சப்ளை பணி..ரோட்டரி சார்பாக முக வசம் வினியோகம்..

இராமநாதபுரத்தில் பாதுகாப்பு கவசங்களுடன் காஸ் சிலிண்டர் சப்ளை பணி..ரோட்டரி சார்பாக முக வசம் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2020, 1:24 pm

இராமநாதபுரம் நகரில் உள்ள வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பொதுமக்கள் நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து, கையுறை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

இராமநாதபுரம் நகரில் முன் மாதிரியாக செயல்படுத்திய வாலியா காஸ் டீலர் பங்குதாரர்கள் ரோட்டரி நிர்வாகிகள் பிஆர்என் ராஜாராம்பாண்டியன்,  பிஆர்என் திருமூலர் உள்ளிட்ட சகோதரர்களின் பணியை பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

முக கவசம் வினியோகம்:-

இராமநாதபுரம்  ஈஸ்ட் கோஸ்ட்  ரோட்டரி சங்கம், ஜெகன் சுரேஷ் நினைவு அறக்கட்டளை சார்பில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் ஆகியோருக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எம்.அல்லி பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஜெ.தினேஷ் பாபு, அரசு மருத்துவர் மலையரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!