17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொள்ளையடிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்; பரிதாபத்தில் மது பிரியர்கள்: ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

கொள்ளையடிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்; பரிதாபத்தில் மது பிரியர்கள்: ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

எழுதியவர்: Askar March 25, 2020, 9:28 am

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை எண் 4713 ல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை திருடி வருகிறார்கள்.

குறிப்பாக 130 ரூபாய்க்கு விற்க வேண்டிய பீரை 140 ரூபாய் என ஏமாற்றி பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் திருடி வருகிறார்கள்.

இதை கண்டுபிடித்து கேட்பவர்களிடம் மின்சார கட்டணம் நாங்கள் கட்டுகிறோம் என்று திருடிய பணத்திற்க்கு கணக்கு கூறுகிறார்கள்.

அரசு டாஸ்மாக் கடையில் மது பானம் வாங்குபவர்கள் பெரும்பாலும் ஏழைகளே. அவர்களிடமே துணிந்து அரசு ஊழியர்கள் திருடுவது வன்மையாக கண்டிக்கதக்கது.

ஒரு டாஸ்மாக் கடையில் பீருக்கு 10 ருபாய், கோட்டருக்கு 10 ரூபாய் , ஹாபுக்கு 20 ரூபாய் புல்லுக்கு 30 ரூபாய் வரை திருடுவதாக தகவல்.

அப்படியானால் அந்த கடையில் ஒரு நாள் நடக்கும் வியாபாரத்தில் பாட்டிலின் எண்ணிக்கையை கணக்கிட்டாலே ஒரு நாளைக்கு திருடுவது மட்டும் லட்சங்களை தாண்டும் என தெரிகிறது.

இது போன்ற திடுடர்கள் தான் போலி மதுபானஙகள் விற்பனையிலும் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் மேலானரும், லஞ்ச ஒழிப்பு துறையும் நடவடிகை எடுத்து வாடிக்கையாளர்களின் பணம் டாஸ்மாக் ஊழியர்களால் கட்டாயமாக திருடப்படுவதை தடுத்து அந்த திருடர்கள் மீது நடவடிக்கை எடுத்து திருட்டை தடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

ஜெ. ஜெயின் ஷாஜி, நாகர்கோவில்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!