17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு மீன் மார்க்கெட் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் அலைமோதும் பொதுமக்கள்…

பாலக்கோடு மீன் மார்க்கெட் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் அலைமோதும் பொதுமக்கள்…

எழுதியவர்: Askar March 25, 2020, 9:04 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மீன் மார்க்கெட் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 144 தடை உத்தரவை அடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன மேலும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மீன் மார்க்கெட் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் அதிக அளவில் பொது மக்கள் கூடுவார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூட மீன் மார்க்கெட் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்கி செல்கின்றனர். இறைச்சி கடைகளில் கொரோனா வைரஸ் குறித்து எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் முககவசம் அணியாமலும் பொதுமக்கள் வந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு முக கவசம் அணிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!