17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு உழவர் சந்தைக்கு சிறியவர் மற்றும் முதியோர் அதிக அளவில் வருவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம்; அதிகாரிகள் அலட்சியம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

பாலக்கோடு உழவர் சந்தைக்கு சிறியவர் மற்றும் முதியோர் அதிக அளவில் வருவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம்; அதிகாரிகள் அலட்சியம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

எழுதியவர்: Askar March 25, 2020, 8:55 am
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இங்கு சுற்றுவட்டார பகுதி  விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் காய்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிதனியாக கடைகள் அமைக்கப்பட்டது. இதில் விவாசயிகள் தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, தேங்காய், வாழைக்காய் மற்றும் ஆங்கில காய்கறிகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக 144தடை மற்றும் ஊரடங்கு உத்தரவையாடுத்து உழவர் சந்தைக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லுகின்றனர். மேலும் 10வயதிற்கு குறைவான சிறுவர்கள் மற்றும் 60வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் சந்தைக்கு வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உழவர் சந்தைக்கு வரும் அதிகாரி காலதமதமாக  வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே உழவர் சந்தையில் சிறியவர்கள் மற்றும் முதியவர்களை தவிர்கவும்
 மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!